திருமண தோஷங்களை நீக்குவதாக கூறி ரூ.92 லட்சம் மோசடி

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவின் புறநகர் பகுதியான சுபன்பூராவை சேர்ந்த மதன் குமார் என்பவர் தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 52. திருமணம் ஆகவில்லை. இதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு திருமணத்துக்கு வரன் தேடும் மேட்ரிமோனியில் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை மதன்குமார் பதிவு செய்துள்ளார். சில வாரங்கள் கழித்து அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசியவர், தன்னை அயோத்தி ராமஜென்மபூமியின் ஜோதிடர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர் மதன்குமாருக்கு பல தோஷங்கள் இருப்பதாக கூறி, அவற்றை கழித்துவிட்டால் 35 வயது பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மதன்குமார், அந்த நபர் அவ்வப்போது கேட்டு வந்த பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். இதேபோல மேலும் பல நபர்களும் மதன்குமாரிடம் ஜோதிடர்கள், ரிஷிகள் என அறிமுகமாகி பணத்தை பெற்றுள்ளனர். இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.97 லட்சத்தை அந்த நபர்களிடம் மதன்குமார் செலுத்தி இருக்கிறார். இத்தனை பரிகாரங்களை செய்தும் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணிப் பார்த்த அவர், ஒரு கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு கொண்டிருப்பதை உணர்ந்த அவர் இந்த மோசடி விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: