காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை இன்று பிற்பகல் விசாரிக்கிறது ஐகோர்ட்..!!

சென்னை: டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. யாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அவர் நாடுவார் என்றும் முன் ஜாமீன் கோருவார் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளார். காவல்துறையில் பணிபுரியும் பெண்ணிற்கே இந்த நிலைமையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கு குறித்து மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தானாக முன்வந்து விசாரிக்கும் இவ்வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இன்று பிற்பகல் 2: 15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரோ அல்லது அரசு தலைமை வழக்கறிஞரோ ஆஜராகி ராஜேஷ் தாஸ் மீதான புகார்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தெரிவிக்கலாம்.

மேலும் கடுமையான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரிக்கைகள் வைக்கலாம். அல்லது ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எந்தமாதிரியான உத்தரவுகள் பின்பற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் தமிழக அரசு தரப்பில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: