2019 - இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னரே எடப்பாடி ஆட்சி நீடித்தது!: அமைச்சர் கடம்பூர் ராஜு ஒப்புதலால் அதிமுக-வினர் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி: 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னரே எடப்பாடி ஆட்சி நிலையான அரசாக இருந்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவை அடுத்து 2017ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அந்த ஆட்சி நிலையான ஆட்சியாக மாறியது 2019ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பின்னர் தான் என்றார்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 2 ஆண்டுகள் நீடிக்கவும் காரணம் இடைத்தேர்தல் வெற்றிதான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக - பாமகவுடன் கூட்டணி அமைத்து இடைத்தேர்தலை எதிர்கொண்டது. இதனால் இடைத்தேர்தலில் அதிமுக எதிரிக்கு பாமக தான் காரணம் என்று அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிவந்தார்.

தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி நீடிக்கவே பாமக ஆதரவு தான் காரணம் என்று அந்த கட்சியினர் அடிக்கடி கூறிவந்த நிலையில், அதனை ஒப்புக்கொள்ளும் வகையில் அமைச்சர் கடம்பூர் ராஜு இடைத்தேர்தலுக்கு பின்னரே அரசு நிலைத்ததாக கூறியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுக-வுக்கு பாமகவின் முக்கியத்துவம் கருதியே வன்னியர் சமூகத்தினருக்கு அத்தனை விழுக்காடு உள்ஒதுக்கீடு தொகுதிகள் ஒதுக்குவதில் தாராளம் என்று அதிமுக இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: