கடலூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போலீஸ் அணிவகுப்பு

கடலூர்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடைமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. கடலூரில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தற்போது போலீஸ் மற்றும் ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் 19ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை 20ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் விதிமீறல்கள் ஆங்காங்கே நடப்பதை தடுப்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் உணர்வினை ஏற்படுத்த தற்போது காவல்துறையினர் கடலூரில் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்துகின்றனர். இதில் துணை ராணுவ படையினர், அதிரடி படையினர் மற்றும் கடலூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இந்த அணிவகுப்பானது நடைபெற்றது.

இது கடலூர் டவுன்ஹாலில் தொடங்கி கடலூரின் முக்கிய வீதிகளான லாரன்ஸ் வீதி, பாரதி வீதி, சங்கர நாயுடு வீதி, திருப்பாப்பூர் ஆகிய இடங்களில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. இவர்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தலில் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தவும் அணிவகுப்பு நடைபெற்று கொண்டிருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அணிவகுப்பானது பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். எந்த தகவலாக இருந்தாலும் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தல் விதிமுறை மீறல்களை ஈடுபட கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

Related Stories:

>