உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் :மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி, கமல், கனிமொழி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதனிடையே பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், மு.க.ஸ்டாலின் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள், என்றார்.

திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும், எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,மக்கள் நலனை மட்டுமே தம் லட்சியமாகக் கொண்டு, அயராது பாடுபடும் கழகத் தலைவர் திரு @mkstalinஅவர்கள் நீடூழி வாழ்ந்திட, வாகைகள் சூடிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இந்நாளில், தமிழகம் தலைநிமிரவும் தலைவர் தளபதி தலைமையில் நல்லாட்சி மலரவும் சபதம் ஏற்போம்! சாதனை படைப்போம்!, எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன், எனக் கூறியுள்ளார். 

Related Stories:

>