பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி அதிகாரி பலி

சென்னை: காஞ்சிபுரம் அருகே  பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி தனியார் நிறுவன அதிகாரி பலியானார். காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கிராமம் குருசாமி நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கோபிநாத்(41). தனியார் நிறுவன அதிகாரி. நேற்று முன்தினம் பணி தொடர்பாக வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை பட்டாபிராம் அருகே திருமணம் என்ற பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் பழுதாகி நின்ற லாரி மீது இவரது பைக் மோதியது. இதில் கோபிநாத், பைக்குடன் தூக்கி வீசப்பட்டு மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடுகின்றனர்.  

Related Stories:

>