தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டக் கிளை  சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வாயில் வேலைநிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கடந்த 17ம் தேதி முதல் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலர்கள், சமூக வனப் பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செல்வராஜ், ரவிக்குமார், லெனின், தமிழரசன், தனசேகரன், ரமணி, நவீன் உள்ளிட்ட 146 வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Related Stories: