பருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு

புதுடெல்லி: ‘பருவமழையை சேமிக்க, இப்போதே ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளை சீர்படுத்த வேண்டும்,’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்று கிழமைகளில் மன் கி பாத் எனப்படும் வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். நேற்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி பேசியதாவது:மனித குலத்தின் வளர்ச்சிக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே - ஜூன் மாதங்களில் பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. இப்போதே நாம் பணிகளை தொடங்குவோம். ஏரிகள், குளங்கள், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் சுத்தம் செய்வோம். நீர் நிலைகளுக்கு மழைநீர் செல்லும் வகையில் இடையில் இருக்கும் தடைகளை அகற்றுவோம்.

நீர் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அருகில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்தி, மழை நீரை சேமிக்கும் நோக்கத்தில் 100 பிரசாரம் தொடங்க இருக்கிறது. ஜல்சக்தி அமைச்சகமானது “மழையை பிடிப்போம்” என்ற தலைப்பில் பிரசாரத்தை தொடங்குகிறது. கோடைக்காலத்தை முன்னிட்டு தண்ணீர் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சரியான தருணம் இதுவாகும். மக்கள் எப்போது உள்நாட்டு பொருட்களால்  பெருமை கொள்கிறார்களோ அப்போது ஆத்மநிர்பார் என்பது ஒரு ெபாருளாதார திட்டமாக  இல்லாமல் நாட்டின் தேசிய உணர்வாக மாறும். இந்திய ஜவுளிகள், திறமை வாய்ந்த கலைஞரால் உருவாக்கப்படும் கைவினைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள், ஒவ்வொரு துறையிலும் நாம் இந்த பெருமையை கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

‘தமிழை கற்க முயற்சி எடுக்காதது வருத்தம்’

 பிரதமர் மோடி மேலும் பேசியபோது, ‘முதல்வர் மற்றும் பிரதமராக இருந்தபோது நீங்கள் தவறவிட்ட ஏதாவது ஒன்று இருக்கிறதா என என்னிடம் கேட்கப்படுன்றது. பழமையான மொழியான தமிழை கற்றுக் கொள்வதற்கு போதுமான முயற்சிகளை என்னால் எடுக்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. தமிழ் இலக்கியங்கள் அழகானவை,’ என்று கவலை தெரிவித்தார்.

Related Stories: