இளைஞர்கள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது: சத்யா, பொருளாதார நிபுணர்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்திற்கு தான் 83 சதவீதம் கடன் சுமை இருக்கிறது. மத்திய அரசு நம்மிடம் இருந்து வருவாயை பிடுங்கிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்மிடம் இருந்து வாங்கியதை திருப்பித்தர மாட்டார்கள். 12 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவை தொகை இருப்பதை மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இதை கொடுக்காததால் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி என்பது முதலில் மாநில அரசு போடுவதாக இருந்தது. இது மத்திய அரசின் கையில் சென்றதால் அதில் கிடைக்கும் வருவாயும் வரவில்லை.

மேலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் மாநில அரசு முறையாகவும் கொண்டுபோய் சேர்க்கவில்லை. எனவே, வரக்கூடிய நாட்களில் இந்த அதிக கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். முதலில் கடன் சுமையை குறைக்க மத்திய அரசிடம் இருந்து நமக்கு சேரவேண்டிய வருவாயை உடனடியாக கேட்டுப்பெற வேண்டும். முதலில் நமக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையான 12 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து நாம் வாங்க வேண்டும். 15வது கிராண்ட் கமிஷனிடம் இருந்தும் நமக்கு நிறைய பணம் வரவேண்டியுள்ளது. இதையும் கேட்டுப்பெற வேண்டும். பிரதமர் மோடி, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய 12 ஆயிரம் கோடியை தராமல் 6 ஆயிரம் கோடியை கொண்டுவந்து திட்டங்களை மட்டும் தொடங்கி வைப்பார் என்றால் அதை எப்படி நாம் சரி என்று சொல்ல முடியும். மாநில அரசின் இந்த பட்ஜெட்டில் இளைஞர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை.  தமிழகத்தில் ஊர்காவல் படையில் 16 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.  

இவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை கூட இந்த அரசு சரியாக கொடுக்கவில்லை. சரியான ஊதியம் கொடுத்தால் 16 ஆயிரம் பேருக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இதை கூட இந்த அரசு அறிவித்து சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இல்லாதது வேதனை அளிக்கிறது.

அரசு நினைத்திருந்தால் வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், இதை செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மாநில அரசு விலையை குறைக்க வேண்டும் என்பது ஒரு சரியான போக்காக இருக்காது. மத்திய அரசு மட்டுமே விலையை குறைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என பாஜ எம்பிக்கள் பேசுகிறார்கள். ஆனால், பாஜ அரசு ஆளும் மாநிலங்களில் கூட பெட்ரோல், டீசல் வரியை அவர்கள் குறைக்கவில்லை. மேலும், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலைகளில் தமிழக இளைஞர்களுக்கு 75 சதவீதம் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. வெறுமனே இலவச அறிவிப்புகள் மட்டுமே உள்ளது.

வரக்கூடிய நாட்களில் இந்த அதிக கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். முதலில் கடன் சுமையை குறைக்க மத்திய அரசிடம் இருந்து நமக்கு சேரவேண்டிய வருவாயை உடனடியாக கேட்டுப்பெற வேண்டும்.

Related Stories:

>