தமிழக தேர்தல் அறிக்கை பட்ஜெட்டாக தாக்கல்: ஆனந்த் சீனிவாசன், பொருளாதார நிபுணர்

ஏப்ரல் 1ம் தேதி தான் இந்த பட்ஜெட் அமலுக்கு வரும். ஆனால், ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்துவிடும். அதனால், ஒரு மாதத்திற்கு மட்டும் தான் இந்த அரசால் பட்ஜெட் போட முடியும். எனவே, இதை பட்ஜெட் அறிவிப்பு போல் இல்லாமல் ஒரு தேர்தல் அறிக்கையாக தான் இதை பார்க்க முடிகிறது. மேலும், பட்ஜெட்டின் அனெக்சரை ஒழுங்காக யாருக்கும் கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி எவ்வளவு கொடுக்க வேண்டும். எவ்வளவு வந்தது, எவ்வளவு கடன் வாங்கினார்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. மத்திய அரசு ரூ.32 ஆயிரம் கோடி தருவதாக கூறினார்கள். ஆனால், வெறும் 23 ஆயிரம் கோடி தான் கொடுத்துள்ளார்கள். இதனால், மத்திய அரசு கொடுத்த வரிவருவாய் பங்கீடு 9 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. மாநில அரசு செலுத்தும் வரி வருவாயும் குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் பதிவு உள்ளிட்டவைகளும் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாட் வரி மட்டுமே அதிகரித்துள்ளது. வட்டிக்கு வட்டி போடுவது போல் வரிக்கு வரி இதில் உள்ளது. இதனால், இது அதிகரித்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தாலும் வரி அதிகரிப்பால் வருவாய் இதில் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் வருவாய் என்பது மிகவும் குறைவு தான். இதேபோல், அடுத்த வருடம் தமிழகத்தின் ஜிடிபி 2 சதவீதம் மட்டும் தான் உயரும் என்கின்றார்கள். இவர்களின் வருவாய் எல்லாம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு மட்டுமே பயன்படும். தேர்தல் முடிந்த பிறகு தான் எல்லாம் தெரியவரும்.

தமிழகத்துக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடனை வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த தடவையே ஏறத்தாழ ரூ.5 லட்சம் கோடி கடன் இருக்கும். இவர்கள் வைத்துச்சென்றுள்ள கடன் அடுத்துவரும் அரசுக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டுறவு கடன், நகைக்கடன் போன்றவற்றை இவர்கள் ரத்து செய்ய முடியாது. ஆனால், இவர்கள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே, வங்கிகளில் வட்டி கட்டாதவர்கள் இருப்பார்கள். இப்போது தள்ளுபடி செய்துவிட்டதாக அரசு கூறியதால் பழைய வட்டியை கட்ட வேண்டும் என வங்கியினர் கூறுவார்கள். இதனால், எப்படி இது சாத்தியப்படும் என தெரியவில்லை.

மே மாதத்தில் தான் இதனுடைய முழு விவரமும் தெரியவரும்.

இவர்கள் வெறும் வரவு, செலவு கணக்கை மட்டுமே சொல்லிவிட்டு அடுத்து வரும் அரசு திட்டங்களை நிறைவேற்றும் என்று கூறியிருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் வரி குறைப்பு என்பது மாநில அரசு அதில் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசு மட்டுமே வரியை குறைக்க வேண்டும். 93 ரூபாயில் 33 ரூபாய் மத்திய அரசின் வரி ஆகும். இதனால், மாநில அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி வரியே சரியாக வரவில்லை. இதில் எங்கிருந்து இவர்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய வருவாய் முழுமையாக வராததாலேயே மாநில அரசு கடன் சுமைக்கு ஆளாக்கியுள்ளது. கூட்டுறவு கடன், நகைக்கடன் போன்றவற்றை இவர்கள் ரத்து செய்ய முடியாது. ஆனால், இவர்கள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே, வங்கிகளில் வட்டி கட்டாதவர்கள் இருப்பார்கள். இப்போது தள்ளுபடி செய்துவிட்டதாக அரசு கூறியதால் பழைய வட்டியை கட்ட வேண்டும் என வங்கியினர் கூறுவார்கள். இதனால், எப்படி இது சாத்தியப்படும் என தெரியவில்லை. மே மாதத்தில் தான் இதனுடைய முழு விவரமும் தெரியவரும்.

Related Stories:

>