ஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 1960ம்  ஆண்டு, ‘கேரள விளையாட்டு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இதில் தற்போது மாநில உள்துறை  திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம்  ஆகியவற்றை உள்ளடக்கிய போட்டி சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக ேகரள  அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய சட்டம் ஆன்லைன்  ரம்மியை மட்டுமே தடை செய்கிறது. அவசரமாக தயாரிக்கப்பட்ட திருத்தம்  எவ்வாறு ஓட்டைகள் இல்லாமல் செயல்படுத்தப்படும் என்பது தெளிவாக இல்லை.  ‘‘கலர் ப்ரிடிக்சன்’ போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இந்த விதியின்  எல்லைக்குள் வராது. ஏனெனில், இந்த திருத்தம் ஆன்லைன் ரம்மி குறித்து மட்டுமே  கூறுகிறது.

Related Stories: