இளம்பெண் மரணத்தில் தொடர்பு? மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்

மும்பை,: புனே இளம்பெண் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும்  வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்  பூஜா சவான் (23). புனேயில் தங்கியிருந்த இவர் கடந்த மாதம் 8ம் தேதி  அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்து கிடந்தார்.  இவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், மாநில வனத்துறை அமைச்சர்  சஞ்சய் ரத்தோட்டுக்கு அந்த ெபண்ணின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக பாஜ  குற்றம்சாட்டியது. மேலும் அவர் இளம்பெண்ணிடம் பலமுறை பேசியதாகவும், அதற்கான ஆதாரங்கள்  அடங்கிய ஆடியோ, வீடியோ கிளிப்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

எனவே அமைச்சர் சஞ்சய் ரத்தோட் பதவி விலக கோரி நேற்று முன்தினம் பாஜ மகளிர் அணியினர்  மும்பை, புனே, தானே உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை  தொடர்ந்து நேற்று சஞ்சய் ரத்தோட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்தார். இதற்கான கடிதத்தை முதல்வர் உத்தவ்தாக்கரேவிடம் வழங்கினார். பின்னர்  செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘இளம்பெண் மரண  விவகாரத்தில் எதிர்கட்சிகள் மோசமான அரசியல் செய்தன.  எனவே நான் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதன் மூலம் உண்மை ெவளிச்சத்துக்கு வரும் என  நம்புகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக சமூக சேவை செய்து ேசர்த்த எனது புகழ்  மற்றும் மதிப்பை கெடுப்பதற்கு இந்த குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டது.  நான் ராஜினாமா செய்யாவிட்டால் இன்று தொடங்கும் பட்ெஜட் கூட்டத்தை நடத்த  விடமாட்டோம் என்று பாஜ எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் விசாரணை  நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக எனது பதவிவை ராஜினாமா  செய்துள்ளேன்’’ என்றார்.

வழக்கு பதிய கோரிக்கை

ரத்தோட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதாது.  இளம்பெண் மரண விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என முன்னாள் முதல்வரும் பாஜவை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான  தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>