30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கடந்த 30 நாட்களுக்கு பின், நேற்று கொரோனா நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 ஆக உள்ளது. இவர்களில் தற்போது, 1,64,511 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமாகி விட்டனர். நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 16,752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது, கடந்த 30 நாட்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அதிக பாதிப்பாகும். அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் உயிர் இழந்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,64,511 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 30 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி, 27ம் தேதி வரை 21,62,31,106 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சனியன்று 7,95,723 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ெதாடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் மேலும்ஒரு மாவட்டத்தில் ஊரடங்கு

மகாராஷ்டிராவில் மொத்தம் 21,46,77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சனியன்று மட்டும் புதிதாக 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிங்கோலி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், இன்று முதல் ஒரு வாரத்திற்கு இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். வங்கிகளின் நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும். அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>