ஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா

பதோர்தா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதியில் விளையாட, கோவா எப்சி அணி தொடர்ந்து 6வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது. நடப்பு சீசனில் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐதரபாத் எப்சி அணியுடன் மோதிய கோவா அணி 0-0 என்ற கணக்கில் டிரா செய்தது. இதையடுத்து 20 லீக் ஆட்டத்தில் 7 வெற்றி, 10 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்ற அந்த அணி 4வது இடத்தை உறுதி செய்து அரை இறுதிக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி 6 வெற்றி, 11 டிரா, 3 தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று 5வது இடத்துடன் திருப்தி அடைந்தது. ஏடிகே மோகன் பகான், மும்பை சிட்டி எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணிகள் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டன.

Related Stories:

>