அம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரத்தில், ஜெய்ஷ் உல் ஹிந்த் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரிலையன்ஸ் குழு தலைவரான முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட ‘அன்டிலா’ அடுக்குமாடி வீடு மும்பையின் அல்டாமவுன்ட் சாலையில் அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த வீட்டின் அருகே சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நின்றிருந்தது. போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதிலிருந்த மிரட்டல் கடிதத்தில், ‘இது வெறும் டிரைலர். அடுத்த முறை குண்டுவெடிக்கும்’ என எழுதப்பட்டிருந்தது.இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதை டெலிகிராம் ஆப் மூலமாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

>