அதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னை மாநகராட்சியின் மேயராக ஒரு முறை அல்ல, இரண்டு முறை இருந்தவன் நான். சென்னையில் போக்குவரத்து நெரிசை குறைக்க 9 பாலங்களை கட்டுனதும் என்னோட சாதனை. குறிப்பிட்ட காலத்திற்குள் பாலத்தை கட்டி முடித்தது மட்டுமல்ல, அதற்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கும் குறைவாக கட்டி கொடுத்தவன் தான் இந்த ஸ்டாலின்.

அண்ணா சாலை மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். செம்மொழி பூங்கா, டைட்டல் பூங்கா, தலைமை செயலகமாக உருவாக்கப்பட்டு இன்றைக்கு பன்னோக்கு மருத்துவமனையாக இருக்கக்கூடிய சிறப்பு மருத்துவமனை. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், கோயம்பேடு காய்கறி அங்காடி, கோயம்பேடு பேருந்து நிறுத்தம், நாமக்கல் கவிஞர் மாளிகை, பாடி பாலம், மூலக்கடை மேம்பாலம், மேற்கு அண்ணாநகர் மேம்பாலம், தொல்காப்பியர் பூங்கா, நெமிலி-மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், தென்சென்னை முழுக்க 1400 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால்வாய் திட்டங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம். ஓஎம்ஆரில் ஐடி காரிடராக மாற்றியது திமுக. இப்படி திரும்பிய பக்கம் எல்லாமல் சென்னையின் தேவையை பூர்த்தி செய்தது திமுகவை சார்ந்த நாங்கள் என்பதை  நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக சென்னை மாநகர மக்களின் வசதிக்காக திட்டமிட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டத்தை 2006ம் ஆண்டு கொண்டுவர கலைஞர் திட்டமிட்டார். ஜப்பானுக்கு சென்று அதற்காக நிதியை பெற்று வந்தவன் நான். மெட்ரோ ரயிலில் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கிறார்கள் என்றால் என்ன காரணம், கலைஞரும், நானும், திமுகவும் தான் காரணம். சென்னை மக்கள் இதை மறக்க மாட்டார்கள். பெரம்பூர் பாலம் திறப்பின் போது முதல்வர் கலைஞர், மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் மட்டுமல்ல எனக்கு துணையாக இருக்கின்ற அமைச்சர் என்று. கலைஞர் மனம் திறந்து பாராட்டினார்.  

நான் என்ன கருதுகிறேன் என்று நினைத்து அதை செயல்படுத்தக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்று பாரட்டினார். அதே போல தான் மா.சுப்பிரமணியம் ஆற்றி வரும் பணியை பார்த்து கலைஞர் பாராட்டினார். என்னையும், மா.சுப்பிரமணியத்தையும் பாராட்டினார் என்றால் சொன்னால் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு கிடைத்த பாராட்டு அல்ல. சென்னை மாநகர வளர்ச்சிக்கு நாம் பாடுபட்டு இருக்கிறமோ அதற்கு கிடைத்த பாராட்டு. இன்று சென்னை மாநகரத்தை பார்க்கிறோம். எங்கு பார்த்தாலும் குப்பை நகரமாக மாற்றி விட்டார்கள். சில மண்டலங்களில் மட்டும் குப்பை அள்ளுவதை தனியாருக்கு விட்டு இருக்காங்க. அந்த பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் டெண்டர் விட்டது போல காட்டி விதிமுறைகளை திருத்தி இருக்கிறாங்க. அது மட்டுமல்லாமல் குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசு இது. இப்போது இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி. இதை நான் கண்டித்த போது தான் அப்போது ரத்து செய்தார்கள்.

ஸ்டாலின் ஸ்டாலினாக இருந்தாலே அதிமுக அழிந்து விடும். அதிமுகவை கரையான் போல பழனிச்சாமி, பன்னீர் செல்வமும் அரித்து கொண்டு இருக்கிறார்கள். அது பலவீனம் அடைந்து விட்டது. அதை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை. பயந்து போய் அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டினது யார் பழனிச்சாமி. ஜெயலலிதாவின் சமாதியை பூட்டியது யார் பழனிச்சாமி. ஜெயலலிதா பிறந்தநாள் அன்றைக்கு கூட அவர் சமாதியை திறக்க முடியவில்லை. அதற்கு காரணம் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு பயம் இருக்கிற பழனிச்சாமி, விரைவில் வீழ்ந்திட போகிறார். மக்கள் அதை செய்வார்கள். ஸ்டாலின் ஆட்சியில் இல்லை. அவர் எதை வேண்டும். ஏப்ரல் 6 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை. நாம் தான் வெற்றி பெற போகிறோம். அப்படி அமைகின்ற ஆட்சி உங்களின் கவலைகளை, உங்கள் கோரிக்கைகளை, உங்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்கிற ஆட்சியாக அமையும். அதிமுக ஆட்சி செய்ய தவறிய கடமையை திமுக நிச்சயம் செய்யும் என்றார்.  இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர்கள் மயிலை த.வேலு, சிற்றரசு, மயிலை த.வேலு, எம்எல்ஏக்கள் மோகன், வாகை சந்திர சேகர், அரவிந்த் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.நகர் தனசேகரன், மகேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா, பாலவாக்கம் சோமு, மாவட்ட இளைஞர் அணி அன்பழகன் ராஜா அன்பழகன், வேளச்சேரி மணிமாறன், பகுதி செயலாளர்கள் மதியழகன், ரவிச்சந்திரன், மடிப்பாக்கம் செல்வம், அரிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கா.ஏழுமலை, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>