திமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா

திருவில்லிபுத்தூர்: அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடப்பதாக திமுக தலைமை தேர்தல் ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி கூறினார். விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும்  நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருவில்லிபுத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைமை தேர்தல் ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி கலந்து கொண்டார். இதன் பின் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அமைச்சர்களின் தொகுதிகளில் பணப்பட்டுவாடா மட்டுமல்லாது பொருட்கள் விநியோகமும் தடையின்றி நடைபெகிறது.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். தேர்தலுக்கு பின், அதிகாரத்தில் இருப்பவர்கள் இவிஎம் மெஷினை மாற்றி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதைத் தடுக்க எவ்வாறு செயல்படலாம் என்று கலந்து ஆலோசிக்கப்பட்டு முறையாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 2 தொகுதிகளில் நடைபெற்ற முறைகேடுகளின் அடிப்படையில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதுபோன்ற முறைகேடுநடந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம். அதற்கு உரிய பலன் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: