அணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..

பழைய வடாற்காடு மாவட்டத்தில் 1967ம் ஆண்டு கணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டது. பின்னர், 1977ம் ஆண்டு கணியம்பாடி தொகுதி கலைக்கப்பட்டு அணைக்கட்டு தொகுதி உருவானது. இதைத்தொடர்ந்து, நடந்த முதல் தேர்தலில் 1977ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றது. அணைக்கட்டு தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த 10 சட்டப்பேரவை தேர்தலில் 6 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், ஒருமுறை திமுக கூட்டணியில் பாமகவும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1977ம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது.

 தொடர்ந்து 84ம் ஆண்டு வரை நடந்த 3 தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது. 91ம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 96ம் ஆண்டில் திமுக ஆட்சி பிடித்தது. 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதுவரை அணைக்கட்டு தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சியை பிடித்ததால், இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் போட்டி, போட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆனால், இந்த நிலைமை தலைகீழாக மாறியது, கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான்.

இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபோதிலும் மாநிலத்தில் திமுக ஆட்சி அமைத்தது. 2011ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்த பாமக வெற்றி பெற்றது. அப்போது அதிமுக ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால், அதிமுக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 3 முறையும் அணைக்கட்டு தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் சார்ந்த கட்சி, ஆட்சியை பிடிக்காத நிலை தொடர்ந்து வருகிறது. விரைவில், நடைபெற உள்ள 16வது சட்டப்பேரவை தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சியை பிடிக்குமா? அல்லது தோல்வி அடையும் கட்சி ஆட்சியை அமைக்குமா? என்று அந்த தொகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Related Stories:

>