அங்க நின்னா... அடி விழுமே!

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அமலான நிலையில் அதிமுகவினர் இலவசமாக பொருட்களை தங்கள் பகுதிகளில் வாரி வழங்கி வருகின்றனர். மதுரை மாவட்டத்தின், திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு இடங்களில் 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என இப்போதே நியமித்து ‘‘தேர்தல் பணிகளை’’ அதிமுகவினர் துவக்கி விட்டார்கள். வீடு, வீடாக சென்று எவர்சில்வர் டிபன் பாக்ஸ், பிஸ்கெட் பாக்கெட்டுடன் அதிமுகவிற்கு ஓட்டு கேட்டு அச்சிட்ட நோட்டீஸ்களையும் விநியோகம் செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னரும் அதிமுகவினர் அச்சமின்றி ஓட்டுக்காக இலவச விநியோகத்தில் இறங்கி இருக்கின்றனர். இதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டும்காணாமல் இருப்பதாக திருப்பரங்குன்றம் தொகுதி எதிர்க்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம், திமுகவின் தொகுதியாகும். மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அத்தொகுதி மக்களிடம் கடும் அதிருப்திக்கு ஆளானதால், மறுபடியும் அங்கு நின்றால் மரண அடி விழுந்து விடும் என்று பயப்படுகிறாராம். வரும் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாற இருக்கிறாராம். இதற்காகவே ஒன்றிய நிதியில் நடந்த பணிகளை திறப்பது, தொகுதிக்கு தொடர்பில்லாத தனது பெயரை இங்குள்ள போர்டுகளில் எழுதுவது என பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து ஏற்படுத்தினார். திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் முனைப்புடன், அதிமுகவினர் ராஜன் செல்லப்பாவிற்கு ஓட்டு கேட்கும் நோட்டீசுடன், இந்த ‘‘டிபன் பாக்ஸ்’’ விநியோக வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

* தீராத குடிநீர் பிரச்னை: ஆ.ராஜா , எல்ஐசி முகவர், நல்லான் பிள்ளை பெற்றாள்

திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட கடம்பாடி, காரனை, வடகடம்பாடி, மணமை, எச்சூர், பையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இங்கு, கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி வைக்கப்படுகிறது. பின்னர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் கிராமங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இப்பணிகளை செய்ய போதிய ஊழியர்கள் இல்லை. இதனால், தண்ணீர் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் விடப்படுகிறது. மேலும், தண்ணீர் 30 நிமிடங்கள் வரை தான் விநியோகிக்கப்படுகிறது.

இதனால், மக்கள் அனைவரும் தங்களது பயன்பாட்டிற்கு குடிநீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மோட்டார் அடிக்கடி பழுதாவதால் சில நேரங்களில் 10 நாட்களில் கூட தண்ணீர் விட முடியாத நிலை உள்ளது. மாமல்லபுரம் அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையை முறையாக பராமரிக்காததால் நிழற்குடை முழுவதும் விரிசல் ஏற்பட்டும், சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும்

Related Stories: