எந்த முகத்தை வச்சிக்கிட்டு நாங்க ஓட்டு கேட்போம்?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் தொகுதி, பரபரப்பின் உச்சம் தொட்ட தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. 1991ல் டி.ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தொகுதி. 1996ல் அதே ஜெயலலிதாவை திமுக வேட்பாளர் சுகவனம் தோற்கடித்த தொகுதி. இந்த வகையில் நடப்பு தேர்தலிலும் அதிமுக அதிருப்தி அலை வேகமாக வீசிக்கொண்டிருக்கும் தொகுதியாக பர்கூர் மாறி இருக்கிறது. அதிலும் அதிமுக தொண்டர்களே கொதிப்பின் உச்சத்தில் இருப்பதுதான் டுவிஸ்ட்.

‘பர்கூர் தொகுதியின் இப்போதைய எம்எல்ஏவாக எங்க கட்சியை சேர்ந்த ராஜேந்திரன் தான் இருக்காரு. அவரு, எம்எல்ஏவானதிலிருந்து தொகுதி பக்கமே வர்றதில்லை. ஆனா, இந்த முறையும் சீட் கேட்டிருக்காரு. அவருக்கு சீட் கொடுத்தாலும் சரி. வாங்கிட்டு வந்தாலும் சரி. நாங்க வேலை செய்யப்போறதில்லை. தொகுதி பக்கமே வராத அவருக்கு எந்த முகத்தை வச்சிக்கிட்டு நாங்க ஓட்டுக் கேட்போம்? வேலை செஞ்சு தோக்கறதை விட, தூர நிற்கிறது தான், நல்லதாப்படுது’ என்பது பர்கூர் தொகுதி ரத்தத்தின் ரத்தங்களின் மைன்ட் வாய்ஸ். இதை சாதகமாக்கி எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் தூயமணி உள்ளிட்ட பலரும் பர்கூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு குடுத்திருக்காங்களாம். ஆக மல்லுக்கட்டு ஆரம்பமாயிடுச்சாம்.

Related Stories: