வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி வினியோகம் செய்யும் இரண்டு கன்வேயர் பெல்டுகளும் அறுந்துவிட்டது. இதனால் முதல்நிலையில் உள்ள 3 அலகுகளிலும் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அறுந்த கன்வேயர் பெல்ட்டை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>