தமிழகத்தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதை தொடர்ந்து மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

* அனைத்து சர்வதேச விமான பயணிகள் பல்வேறு கட்டுபாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.  

* அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை  சுத்தமாக வைத்து கொள்வதை கணகாணித்து உறுதி செய்ய வேண்டும்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக இந்த விதிகளை பின்பற்ற வேண்டும்.

* பயணிகள் ரயில்கள், விமான போக்குவரத்து மெட்ரோ ரயில்கள், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் உணவு விடுதிகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், யோகா மையம் ஆகியவற்றில் வழிகாட்டி நெறிமுறை விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆரோக்கிய சேது செயலிகளை தொடர வேண்டும்.

* பொதுஇடங்கள் மற்றும் பணி செய்யக் கூடிய இடங்கள் மற்றும் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

* பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் சட்ட விதிகளை பின்பற்றி அபராதம் விதிக்க வேண்டும்.

* அலுவலகங்கள், பணிக்கூடங்கள், கடைகள், சந்தைகள், தொழிற்சாலைகள், வர்த்தக மையங்களில் பணியாற்றக்கூடிய நேரங்களில் விதிகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மற்றும் சானிடைசர் கடைகள் அனைத்து நுழைவு வாயில்களில் வைக்க வேண்டும்.

Related Stories:

>