தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 50,652 பேருக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,51,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 490 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,35,024 பேர் குணமடைந்துள்ளனர். 4,022 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச்சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,496 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>