மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

குளச்சல்: குமரியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா 10 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான மாசிக்கொடை விழா திருக்கொடியேற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷபூஜை, சிறப்பு செண்டை மேளம் நடந்தது. 7.45 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது.

இதில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தர்ராஜன், கலெக்டர் அரவிந்த், எஸ்.பி.பத்ரி நாராயணன், பத்மநாபபுரம் சப் - கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து மாநாடு திடலில் இந்து சேவா சங்கத்தின் 84 வது சமய மாநாடு கொடியை தலைவர் கந்தப்பன் ஏற்றினார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மதியம் கருமங்கூடல் தொழிலதிபர் கே.எஸ்.வி.கல்யாணசுந்தரம் இல்லத் திலிருந்து அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1 மணிக்கு உச்சகால பூஜைம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7 மணிக்கு திருவிளக்கு, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது.

Related Stories:

>