தேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

திருத்தணி: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக, ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் 50 ஆயிரம் ரூபாய் வரை எவ்வித ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மேல் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துவிடுவார்கள்.

உரிய ஆவணங்கள் கொடுத்த அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழக, ஆந்திர எல்லையில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தாசில்தார் திருமூர்த்தி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் திருத்தணி, சோளிங்கர் சாலையில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

Related Stories:

>