ஆவடி: ஆவடி திருவள்ளூர் நகர், அன்பர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (31). இவர் டிப்ளமோ இன்ஜினியர். திருமணமாகவில்லை. பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைகேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். இருப்பினும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனிடையே சுரேசுக்கு பெண் பார்த்துவந்துள்ளனர். ஆனால் சரியான வேலை இல்லாததால் சரியான பெண் அமையவில்லை. இதன்காரணமாக சுரேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற சுரேஷ் இன்று அதிகாலை வரை வெளியே வரவில்லை என்றதும் பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது சுரேஷ் இறந்து கிடந்தார். அவரது வாயில் இருந்து நுரை பொங்கியிருந்தது. அவரது சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.