×

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்ததை அடுத்து, தன் ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏல்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களில் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணனைத் தவிர்த்து மற்றவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பல்வேறு நிர்வாகிகள் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது  சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நான் வகிக்கும் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை மட்டும் என் சுய முடிவின்படி ராஜினாமா செய்கிறேன். இதனை இன்றே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Speaker ,Shikegolu ,State Assembly of Vavachcheri ,Ramilingam ,Pajaka , Puducherry, Speaker of the Legislature, Sivakozhunthu, resigns
× RELATED வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய...