×

கொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரி அருகே நகராட்சி நிலத்தில் தனியா ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் ஏரிக்கு நீர் வரத்துள்ள ஜிம்கானா பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இப்பகுதி அருகே, நகராட்சி சாலைப் பகுதியில் தனியார் ஆக்கிரமித்து வேலி அமைத்தனர். இதனால், சாலையின் அளவு குறைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு தடை ஏற்பட்டது. சீசன் காலங்களில் ஒருவழிப்பாதையாக அமல்படுத்தப்படும். அப்போது கனரக வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு அனுமதிக்கப்படாது. இந்த சூழலில் ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இந்த பகுதியில் நிறுத்தி வேறு வாகனங்களின் சுற்றுலா சென்றுவிட்டு தங்களது, பஸ்களில் ஏறி ஊர்களுக்குச் சென்று வருவார்கள். தனியார் இந்த பகுதியை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும் இந்த ஆக்கிரமிப்பு தடையாக உள்ளது. எனவே, ஜிம்கானா பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளை ஆய்வு செய்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கொடைக்கானல் நகரமைப்பு ஆய்வாளர் கூறியதாவது: தனியார் ஆக்கிரமித்து அமைத்துள்ள வேலிகளை, அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Lake of Coronation , Kodaikanal Lake, occupation, removal, demand
× RELATED நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம்...