தாவரவியல் பூங்கா பெர்னஸ் புல் மைதானமும் மூடல்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி காரணமாக இருந்த பெர்னஸ் புல் மைதானம் மற்றும் பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனுக்காக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஐந்து லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அவைகளையும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி பூங்காவில் உள்ள புல் மைதானங்களை சீரமைக்கும் பணிகளை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் மற்றும் பெர்னஸ் புல் மைதானங்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவ்விரு பொது மைதானங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய புள்வாய் தானம் மட்டும் சுற்றுலா பயணிகள் செல்ல திறக்கப்பட்டுள்ளது.வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் காணப்பட்டனர்.

Related Stories:

>