குட்டிகளுடன் இடம் பெயரும் யானைகள்

வால்பாறை.: ஆனைமலை மற்றும் கேரளா எல்லையொட்டிய பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட கூட்டமாக உள்ள இவை ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல், ஆண்டு முழுவதும் 300 கி.மீ. தூரம் இடம்பெயர்வது வழக்கம். இவை பல்வேறு வழித்தடங்களில் இடம் பெயர்ந்து வருகின்றன. ஒவ்வொரு வழித்தடத்திலும் 100 யானைகள் கொண்ட 10 யானை கூட்டம் இடம்பெயர்ந்து வருகின்றன. சுழற்சி அடிப்படையில் இடம்பெயர்வதால் ஒரு யானை கூட்டம்  மற்றொரு யானை கூட்டத்தை சந்திப்பதில்லை. என்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன்படி வால்பாறை பகுதியில் பகுதியில் ஆண்டுதோறும் கூமார் 100 யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதில் 4 யானை கூட்டம் ஏதாவதொரு பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த நவம்பர், டிசம்பரில் வழக்கமான யானைகளை விட வால்பாறை பகுதியில் கூடுதலாக 150க்கும் மேற்பட்ட யானைகளின் நடமாட்டம் இருந்தது குளிர்கால கணக்கெடுப்பில் தெரியவந்தது.

கடந்த 3 மாதங்களில் 150க்கும் மேற்பட்ட யானைகள் 15க்கும் மேற்பட்ட கூட்டமாக நடமாடி உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இடம்பெயர்ந்த யானைகள் மீண்டும் வந்த வழியே மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லத்துவங்கியுள்ளதாக வன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக யானைகள் 3 இடங்களில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. முருகாளி, வில்லோனி, பன்னிமேடு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் வழியாக நுழைந்து, பல ஆண்டுகளாக யானைகள் பயன்படுத்திய வழக்கமான வலசப்பாதைகள் வழியாக மேய்ச்சலில் ஈடுபடுகிறது.

இந்நிலையில் மீண்டும் யானைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வனப்பகுதிக்குள் நுழையத்துவங்கியுள்ளது. மேலும் இனப்பெறுக்க காலம் முடிந்துள்ள நிலையில் யானைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கத்தைவிட அதிக நேரம் முகாமிட்டு உள்ளது.

நேற்று புதுத்தோட்டம் அடர் வனப்பகுதியைவிட்டு மித வனப்பகுதிக்கு குட்டியுடன் வந்த அங்கிருந்த காட்டுச்செடிகளை மேய்ந்தன. குட்டி அங்கும் இங்கும் செல்ல அதற்காக மற்ற யானைகளும் நிதானமாக காத்து சென்றன. இதனால் சற்று நேரம் அதிகமாக மித வனப்பகுதியில் அவை இருந்தன. பின்பு அடர் வனப்பகுதிக்கு சென்றன. இதனால் வனத்துறையினர் புத்துத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தபோது ஏற்பட்ட பிரச்னைகள் மீண்டும் வரலாம். எனவே மீண்டும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, யானைகளை பார்த்தால் தகவல்களை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>