தாவரவியல் பூங்காவில் வேலை செய்யாத தண்ணீர் ஏடிஎம் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாவட்ட எல்லைக்குள் உள்ள சாலையோர கடைகளில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யவும் குளிர்பானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனை எடுத்து வந்தாலும் அதனை பறிமுதல் செய்வது மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்டம் முழுவதும் சுமார் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டன. இந்த ஏடிஎம்களில் காசு போட்டால் தண்ணீர் வரும். ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த வாட்டர் ஏடிஎம்கள் வேலை செய்யாத நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுற்றுலா பயணிகளை அதிகம் வரும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம் வேலை செய்வதில்லை. காசு போட்டால் தண்ணீர் வருவதில்லை.

காற்று மட்டுமே வருகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வாட்டர் ஏடிஎம்மில் காசை போட்டால் தண்ணீர் வருவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வாட்டர் ஏடிஎம் ஐ சர்வீஸ் செய்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>