தமிழகத்தில் 162 இடங்கள் வரை வெற்றிபெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லி: தமிழகத்தில் 162 இடங்கள் வரை வெற்றிபெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள 5 மாநிலங்களில் ABP மற்றும் CVoter நிறுவனங்கள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 154-162 இடங்கள் வரை கைப்பற்றும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு 58 - 66 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை பொறுத்தவரை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 83- 91 இடங்களை கைப்பற்றும், காங்கிரஸ் 47 - 55 இடங்களையும், பாஜக 2 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை கைப்பற்றும், பாஜக - 92 - 108 இடங்களையும், காங், இடதுசாரி கூட்டணி 39 - இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கனியை பறிக்கும் பாஜக முதல் முறையாக புதுச்சேரியிலும் 17 - 21 தொகுதிகளுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ABP  கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>