×

சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி கடந்த பிப்ரவரி 26ம் தேதி தாக்கல் செய்தார். வன்னியர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா மீது விவாதம் என்பது உடனடியாக நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து, தற்போது வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. 20% இட ஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

Tags : Governor ,Panwaral Prohit ,Vannians , Vanniyars, reservation, bill, approved by Governor Banwarilal Purohit
× RELATED திருத்தனி அடுத்த கனகம்மாசத்திரம்...