பரபரப்பான தேர்தல் களம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் குழு ஆலோசனை..!

சென்னை: சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச்சு நடத்திய பாஜக தேர்தல் குழுவினர் தற்போது அமித்ஷாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அட்டவணையை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கும் மிக குறைந்த நாட்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.

இந்த நிலையில், அமமுகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜ கோரிக்கை வைத்ததால், முதல்வர் எடப்பாடியுடன், பாஜ மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: