ஆண்டிபட்டியில பிரசாரம்பா...அயிரையை ரெடி பண்ணிரு...!

தேர்தல் தேதி வேற அறிவிச்சாச்சு... ஏற்கனவே பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அதி தீவிரம் காட்ட வேண்டிய நிலையில் கட்சிகள் உள்ளன. பல மாவட்ட தலைநகரங்கள், கிராமங்களுக்கு எல்லாம் தலைவர்கள், சிறப்பு  பேச்சாளர்கள், நடிகர்கள் பிரசாரத்துக்காக செல்ல வேண்டி இருக்கும். பிரசாரம் தரமாக இருந்தாலும், உணவையும் சிறப்பாக கவனிக்கணும் இல்லையா? இதனால் தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எந்த கட்சி நிர்வாகி வீட்டில்  மதிய உணவை தயார் செய்ய சொல்வது, இரவு தங்குவதற்கு ஏற்பாடு  செய்வது உள்ளிட்ட பட்டியலும் தயாராகுமாம். தேதி ரெடியாகி தலைவர் பிரசாரத்துக்கு வரும்போது, நிர்வாகி வீட்டில் தடபுடல் விருந்து தயாராகுமாம். மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களை பொறுத்தவரை அயிரை மீன் என்றால் அரசியல் தலைவர்களுக்கு ஏக விருப்பமாம். அடுத்து அவர்களை அசத்தும் மற்றொரு அசைவ உணவு நாட்டுக்கோழி குழம்பு. இதுபோக தலைவர்களின்  விருப்ப உணவை அறிந்துக்கொண்டு அதில் கைதேர்ந்தவர்களை அழைத்து சமைப்பார்களாம். யாராக இருந்தாலும் தென்மாவட்ட பிரசாரத்திற்கு வந்தால் இங்கே கேட்கும் முதல் கேள்வி? ‘‘அந்த அயிரை மீன் குழம்பு எங்கேப்பா கிடைக்கும்...’’  என்பதுதானாம்.

Related Stories:

>