எங்க கட்சி ஆட்சிக்கு வந்தா 4 துணை முதல்வரை உருவாக்குவேன்: நேற்று கட்சி ஆரம்பிச்ச அர்ஜுனமூர்த்தி அலப்பறை

நடிகர் ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்டவரு  பாஜ அறிவுசார் பிரிவோட மாஜி  தலைவர் அர்ஜூன மூர்த்தி. நேற்று புதுசா அரசியல் கட்சி தொடங்கினாரு. அவரோட கட்சிக்கு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சின்னு பெயர் வச்சிருக்காரு.  கட்சியோட சின்னம், கொடியை அவர்  அறிமுகம் செஞ்சாரு. பிறகு நிருபர்கள்கிட்ட அவர் பேசியது: வயதாக வயதாக எல்லாரும் காசிக்கு போவாங்க. ஆனா,  நான் அரசியலுக்கு வந்துட்டேன்.நான் பாஜவிலே இருந்து இருந்தா, பல பதவிகள் கிடைச்சிருக்கும். ஆனா, நான் ஆண்டவனோட கட்டளையை  மீறல. ரஜினியோட பாதம் தொட்டு தனி கட்சி துவக்குறேன். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியோட மானசீக தலைவரா ரஜினிகாந்த்  இருப்பாரு. அதேநேரத்துல, கட்சி நிர்வாகத்துக்குன்னு தனியா ஒரு தலைவர் நியமிக்கப்படுவாரு.

அதிகாரத்தை பரவலாக்கணும். அதுக்கு தமிழகத்துல 4 துணை முதல்வர் பதவி கொண்டு வருவேன். அண்ணாகிட்டேயிருந்து, எம்ஜிஆர் பிரிஞ்சு வந்த மாதிரி நான் ரஜினிகிட்டேயிருந்து, பிரிஞ்சு வந்திருக்கேன். ரஜினிகாந்த் தன்னோட ரசிகர்கள்   எந்த கட்சியில வேணும்னாலும் சேர்ந்துக்கிலாம்னு சொல்லிட்டாரு. அதே சமயத்துல ரஜினி ரசிகர்கள் என்னை நம்பி வரலாம். இவ்வாறு அர்ஜுன மூர்த்தி சொல்லியிருக்காரு.

Related Stories:

>