பறக்கும்படை குழுவில் உள்ளூர் வீடியோகிராபர்களுக்கு ‘நோ என்ட்ரி’

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்த உடனேயே அதிகாரிகளின் சோதனையும் சூடுபிடித்துவிடும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து போலீசார்,  அதிகாரிகள் குழுவால் 24 மணி நேர சோதனைகள் நடத்தப்படும். இவ்வாறு சோதனைகள் நடைபெறும்போது அந்த காட்சிகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.  இந்தநிலையில் தேர்தலில்  புகைப்படம், வீடியோ மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாக்கும் தேர்தல் பணிகளுக்கு மாவட்ட வாரியாக டெண்டர் பிறப்பிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையை  மாற்றி இந்தமுறை  கார்பரேட்   நிறுவனங்களுக்கு ரகசியமாக பணிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

தேர்தல் பணிக்காக இதுவரை மாவட்டங்களில் உள்ள புகைப்பட கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் பணிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாத்தலை கண்காணிப்பது, பணபட்டுவாடா செய்வதை தடுக்க வீடியோ  எடுக்கும் பணிகளை கார்பரேட் நிறுவனத்திற்கு  தமிழக அரசு ரகசியமாக  அனுமதி வழங்கியுள்ளதாக  கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள்  சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

Related Stories:

>