திடீர்னு அறிவிச்ச தேர்தல் தேதி... அலறிய அதிமுகவினர்

தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கேற்ப ஆளும்கட்சியினர் பணம், பரிசு பொருட்களை பதுக்கி வைக்கும் பணிகளை தொடங்க இருந்தனர். ஆனால்  யாரும் எதிர்பாராத நிலையில், நேற்று முன்தினம் மாலை தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால், ஆளும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசு பொருட்களை சேர்க்க  வேண்டிய இடத்தில் சேர்க்க முடியாமல் போய்விட்டதே என குமுறினர். அதேபோல் நேற்று முன்தினம் 4 மணிக்கு முன்னதாக அரக்கோணம், சோளிங்கர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்கள் நிதியில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு திறப்பு விழா அவசரம், அவசரமாக நடந்தது. புதிய  திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை நேற்று முன்தினம் அவசரகதியில் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். கான்ட்ராக்டரிடம் கமிஷன் வாங்கிவிட மும்முரம் காட்டி பல பணிகளை தொடங்கியதாக ஆளுங்கட்சியை சேர்ந்த  நிர்வாகிகளே பேசுகின்றனர்.

Related Stories:

>