ஆள் மாற்றி ஓட்டு போட்டால் அந்த பூத்துக்கு மறுதேர்தல் தான்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு  தேர்தலின்போதும் வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று, கடைசி நேரத்தில் வாக்குப்பதிவு மையங்களில் உள்ளவர்கள் முகவர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்களிடம் பேரம் பேசி வலையில் வீழ்த்தி ஆட்களை மாற்றி ஓட்டுகள் போட்டதாக  புகார்கள் வருவது வழக்கம்.

இந்தநிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, பேசிய கலெக்டர் சண்முகசுந்தரம், ‘‘கடந்த முறை வேலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில்  ஆட்களை மாற்றி ஓட்டு போட்டதாக புகார்கள் வந்தது. தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆட்களை மாற்றி ஓட்டு போட்டதாக புகார் வந்தால், அந்த பூத்துக்கு மறு தேர்தல் நடத்தப்படும்’’ என்றார்.  இந்த அறிவிப்பு கூட்டத்திற்கு வந்த அனைத்து கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: