மறுபிறவி எடுத்து மீண்டு வந்துள்ளேன்: அமைச்சர் காமராஜ் உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறுபிறவி எடுத்து மீண்டு வந்துள்ளதாக அமைச்சர் காமராஜ் பேரவையில் உருக்கமாக பேசினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியதும், சபாநாயகர் தனபால் அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. எனவே, கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அமைச்சர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மனதில் கொண்டு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.  சட்டப்பேரவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு உணவு துறை அமைச்சர் காமராஜ் பதில் அளித்து பேசுகையில், ‘‘நான் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். நான் மீண்டு வருவேனா  என்று நினைத்த நேரத்தில், இன்றைக்கு உடலில் உயிர் இருக்கிறது. மறுபிறவி எடுத்து மீண்டு வந்துள்ளேன் என்று உருக்கமாக பேசினார்.

Related Stories:

>