குளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்

திருத்தணி: திருத்தணி அடுத்த கொத்தூர் கிராமத்தில் இருந்து புஜ்ஜிரெட்டி பள்ளிக்கு செல்லும் இணைப்பு சாலையில் உள்ள சின்னப்பரெட்டி குளத்தில் நேற்று ஏராளமான ஏடிஎம் கார்டுகள் வீசப்பட்டு கிடந்தன. இதனை அவ்வழியே சென்றவர்கள்  பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது குளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மிதந்தது. விசாரணையில், திருத்தணி வங்கியில் இருந்து பொதட்டூர்பேட்டை - பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்ட ஏடிஎம் கார்டுகள் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் கார்டை  குளத்தில் வீசியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். மேலும் கூரியர் நிறுவனம் பற்றியும் விசாரிக்கப்படுகிறது. குளத்தில் ஏடிஎம் கார்டுகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>