வீட்டில் நகை கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தோப்புகெல்லி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(35). கடந்த 23ம் தேதி உறவினர் திருமணத்திற்காக வேலூர் சென்று விட்டு பின்னர் நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு  உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம  நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>