மக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்

செங்கல்பட்டு: நடப்பாண்டில், தனது தொகுதி மேம்பாட்டு நிதி  அனைத்தும், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது என திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தெரிவித்தார். செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. செங்கல்பட்டு நகராட்சி 23வது வார்டு காண்டிபன் தெருவில் தார் சாலை அமைக்க 7லட்சம், 25வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு தார்சாலைக்கு 7 லட்சம், 12வது வார்டு ஜீவானந்தம் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க 7 லட்சம், 15வது  வார்டு மசூதி தெரு, புதிய பஸ் நிலையம் அருகே சிமென்ட் சாலை அமைக்க 5 லட்சம், 4வது வார்டு ஜாபர் தெரு  சிமென் சாலைக்கு 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், 1வது வார்டு வி.பி.சிங் நகர், 29வது வார்டு அனுமந்தபுத்தேரியில் போர்வெல்,  மின்மோட்டார், சின்டெக்ஸ் தொட்டி, 7வது வார்டு பச்சையம்மன் கோயில், 30வது வார்டு ஜிஎஸ்டி ரோடு ஆகிய பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்க  தலா 3.5 லட்சம் என செங்கல்பட்டு நகராட்சியில் ₹52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதேபோல், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் படவேட்டம்மன் நகர், திம்மாவரம், அம்பேத்கர் நகர், பழவேலி ஊராட்சி பிரதான சாலை, வில்லியம்பாக்கம் ஊராட்சி காயத்ரி நகர், தென்மேல்பாக்கம், திரவுபதி நகர், குன்னவாக்கம்  ஊராட்சி மசூதி தெரு, சாஸ்திரம் பாக்கம், பட்டரைவாக்கம், சென்னேரி, திருவடிசூலம் உள்பட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்ய 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>