நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 317 மாணவிகள் கடத்தல்: போலீஸ், ராணுவம் மீட்பு நடவடிக்கை

லாகோஸ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வபோது, பள்ளி மாணவர்களை கடத்திச் சென்று, அரசை மிரட்டி பணம் பறிப்பது, தங்களுக்கு சிறையில்  இருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய்யவும் பணயமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் வட பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில்  உள்ள ஜங்கேபே நகரின் அரசு பெண்கள் உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 317 மாணவிகளை, தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

அவர்கள் அங்கு வருவதற்கு முன், தங்களுடைய கடத்தல் வேலைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, வரும் வழியில் இருந்த காவல் சோதனைச் சாவடி, ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி விட்டு வந்துள்ளனர். பின்பு, பள்ளிக்கு  சென்ற அவர்கள் பலமணி நேரம் அங்கு இருந்தனர். பிறகு, லாரிகள் மூலம் மாணவிகள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். பள்ளியின் அருகே தீவிர ராணுவ கண்காணிப்பு இருந்தும் மாணவிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவத்துக்கு பெற்றோர்கள் கடும்  அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட மாணவிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. போலீசாரும், ராணுவத்தினரும் சேர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>