மேற்கு. வங்கத்தில் ஜனநாயகப் போர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த மாதம் இங்கு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர்  செயல்பட்டு வருகிறார். இவர் தனது நேற்றைய டிவிட்டரில், ``இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போர்களில் ஒன்று மேற்கு வங்கத்தில் நடக்கிறது. மேற்கு வங்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.  சரியான நேரத்தில் உரிய பதில் அளிப்பார்கள். மேற்கு வங்கம் மண்ணின் மகளையே விரும்புகிறது. தேர்தல் முடிவு வரும்போது, என்னுடைய கடைசி டிவிட்டர் பதிவை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்,’’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>