ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா

திருவனந்தபுரம்: கேரள   மாநிலம், திருவனந்தபுரத்தில்  ஆண்டுதோறும் மாசி மாதம்  நடக்கும் ஆற்றுகால் பகவதி  அம்மன் கோவில் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவார்கள்.இந்நிலையில், இந்த ஆண்டு  பொங்கல் விழா கடந்த 19ம் தேதி அம்மனை காப்புக்கட்டி  குடியிருத்தும் சடங்குடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாளாக இன்று (27ம்   தேதி) புகழ் பெற்ற பொங்கல் வழிபாடு நடந்தது.   இம்முறை கொரோனா பரவல் காரணமாக பொது  இடங்களில் பொங்கலிட அனுமதியில்லை.

கோயில் வளாகத்தில்  பண்டார அடுப்பில் மட்டுமே பொங்கல் இடப்பட்டது.  பக்தர்கள் அவரவர் வீடுகளிலேயே பொங்கல் இடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், பொதுமக்கள் தங்கள்  வீடுகளில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: