ஆல் பாஸ் அரசாணை வெளியீடு

சென்னை: 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.    கடந்த 25ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் பழனிசாமி 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இதற்கான  அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில், 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>