ஆர்டிஓக்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் ஆர்டிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஆர்டிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள விபரம்:  சுந்தரமூர்த்தி (சென்னை மேற்கு)- மீனம்பாக்கம்; யுவராஜ் (சென்னை தெற்கு)- சோழிங்கநல்லூர்; மூக்கண்ணன் (சிதம்பரம்)- கடலூர்; திருவள்ளுவன் (சோழிங்கநல்லூர்)- சென்னை மேற்கு; காளியப்பன் (வானியம்பாடி)-திருப்பத்தூர்; அருணாச்சலம்  (திருவண்ணாமலை)- சிதம்பரம்; அறிவழகன் (நாகப்பட்டிணம்)- தஞ்சாவூர்; பிரபாகர் (ரங்கம்)- அரியலூர் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னை வடக்கு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையராகவுள்ள ராமகிருஷ்ணன், வாணியம்பாடிக்கு ஆர்டிஓவாக மாற்றப்பட்டுள்ளார். வேலூரில் துணை போக்குவரத்து ஆணையராகவுள்ள துரைசாமி,  ஓசூருக்கு ஆர்டிஓவாக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் பழனிசாமி (தென்காசி)-பெரம்பலூர்; ஆனந்த் (பெரம்பலூர்)-தென்காசி; குமரா (மீனம்பாக்கம்)-திருவண்ணாமலை; குமார் (திருப்பூர்)-ரங்கம்; ஈஸ்வரமூர்த்தி (ஓசூர்)-வேலூர் (துணை போக்குவரத்து ஆணையர்); சேலையன் (மேட்டூர்)-  சென்னை வடக்கு (கூடுதல் ஆணையர்); வெங்கடேசன் (அரியலூர்)- விழுப்புரத்துக்கு (துணை போக்குவரத்து ஆணையர்) மாற்றப்பட்டுள்ளனர். இதில் அடைப்புக்குறிக்குள் அவர்கள் தற்போது பணியாற்றும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>