தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சிகள் விளம்பரம் தமிழகம் முழுவதும் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தால் தமிழம் முழுவதும் அரசியல் கட்சி விளம்பரங்களை மாநகராட்சி உழியர்கள் அதிரடியாக அகற்றினர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ெசன்னை முழுவதும் உள்ள சுவர் விளம்பரங்களை உடனடியாக  அகற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு இடத்தில் உள்ள அனைத்து சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், கட்அவுட்டுகள், பேனர்கள், கொடிகள் உள்ளிட்டவை தேர்தல் அறிவிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் அகற்றப்படும். ரயில், பஸ் நிறுத்தங்கள், சாலைகள், அரசு பஸ்கள், தொலைதொடர்பு நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் தேர்தல் அறிவிப்பில் இருந்து 48 மணி நேரத்துக்குள் அகற்றப்படும்.

தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், உள்ளூர் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு ஏதேனும்  இருந்தால் தேர்தல் அறிவிப்பில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ெசன்னை முழுவதும் அனைத்து இடங்களில் உள்ள விளம்பரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதை போல் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள்  அகற்றப்பட்டுள்ளன.

Related Stories: