மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஒப்பந்ததாரரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது

புழல்: புழல் லட்சுமிபுரம் பகுதியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னையை சேர்ந்த பிரகாஷ் (40), ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார். இந்நிலையில், புழல் லட்சுமிபுரம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் புரட்சி ராஜேஷ் (37), இந்த பகுதியில் வேலை நடைபெற வேண்டும் என்றால், மாமூல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், வேலை செய்ய விடமாட்டேன், என பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பிரகாஷ் மாமூல் தராமல் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புரட்சி ராஜேஷ், பிரகாஷை சராமரியாக அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து, புழல் போலீசில் பிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், புரட்சி ராஜேஷை நேற்று முன்தினம் மாலை கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>